மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

கிராமப் பெண்களின் சேலைகளைத் துவைக்க வாலிபருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிபதிக்கு நீதிமன்றப் பணிகளை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாலன் குமார் சபி (20). சலவைத் தொழிலாளரான இவர், கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஒருவரை மானபங்கப்படுத்தினார். அவரை பாலியல் வன்கொடுமை செய்யவும் முயன்றுள்ளார். இதையடுத்து லாகஹா போலீஸ் ஸ்டேஷனில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனக்கு ஜாமீன் கோரி, அவர் ஜஞ்சார்புர் கூடுதல் செசன்ஸ் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி அவினாஷ் குமார் அவருக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கினார். அதாவது, லாலன் குமார் வசிக்கும் கிராமத்தில் உள்ள அனைத்துப் பெண்களின் சேலைகளையும் இலவசமாக ஆறு மாதத்துக்கு சலவை செய்ய வேண்டும். பின்னர் அதை அயர்ன் செய்து ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்க வேண்டும். இதைக் கண்காணித்து ஊர் பஞ்சாயத்துத் தலைவர் நஜிமா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவர் இதைச் செய்யவில்லை என்றாலும் நீதிமன்றத்தில் பஞ்சாயத்து தலைவர் தெரிவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்த வித்தியாசமான தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தீர்ப்பை அளித்தவர் ஜஞ்சார்புர் கூடுதல் செசனஸ் நீதிபதி அவினாஷ்குமார், ஏற்கனவே இதுபோன்ற சில தீர்ப்புகளை வழங்கி உள்ளார். இந்தத் தீர்ப்புக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இது தொடர்பாக பாட்னா உயர் நீதிமன்ற நிர்வாகம் ஓர் உத்தரவை வழங்கியுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நீதி மன்றப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பிகார் உயர் நீதிமன்ற நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஞாயிறு 26 செப் 2021