மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

நோபல் பரிசு வழங்கும் விழா ரத்து ஏன்?

நோபல் பரிசு வழங்கும் விழா ரத்து ஏன்?

நோபல் பரிசு வழங்கும் விழா இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுகிறது என நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

நோபல் பரிசு ஓர் உலகளாவிய நிகழ்வு. ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு கண்டங்களில் பல்வேறு சாதனைக்காக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அடுத்த மாதம் 4 முதல் 11ஆம் தேதி வரை அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலால் இந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் விழா ரத்து செய்யப்படுகிறது என நோபல் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் விதர் ஹெல்ஜெசன் கூறியுள்ளார்.

தொற்றுநோய் மற்றும் சர்வதேச பயண சாத்தியக் கூறுகள் குறித்த நிச்சயமற்ற தன்மை போன்ற பல்வேறு காரணங்களால் நோபல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்கள் நாடுகளில் அதைப் பெற்றுக் கொள்வார்கள் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் ஸ்டாக்ஹோம் மற்றும் ஓஸ்லோ நகரங்களில் காணொலி மூலம் மிக எளிமையான முறையில் வரும் டிசம்பரில் 10 அன்று நோபல் பரிசு வழங்கப்படும் என்று தெரிகிறது.

-ராஜ்

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

ஞாயிறு 26 செப் 2021