தடுப்பூசி முகாம்களில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர்!

public

சென்னையில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் அக்டோபர் மாத இறுதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் 28 லட்சம் பேருக்கும், செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம்களில் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இன்று(செப்டம்பர் 26) தமிழ்நாடு முழுவதும் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இன்று 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம் குறித்து மாநகராட்சி, நகராட்சி சார்பிலும் வீடு, வீடாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் தடுப்பூசி போட அழைப்பு விடுக்கப்பட்டது. மாநகராட்சி வாகனங்கள் மூலமும் அறிவிப்புகள் செய்து தடுப்பூசி முகாமுக்கு பொது மக்களை வரவழைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். இன்று காலை முதல் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் 200 வார்டுகளில் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு ஆய்வு மேற்கொண்டார்.

தடுப்பூசி போட வந்தவர்களிடம் போதிய வசதிகள் உள்ளதா? என்று கேட்டு அறிந்தார். அங்கிருந்த சுகாதார ஊழியர்களிடம் இதுவரை எவ்வளவு பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்? தடுப்பூசி முகாம் எப்படி செல்கிறது? போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து பட்டாளம் தட்சுணாமூர்த்தி திருமண மண்டபம் அயனாவரம் நேரு மண்டபம், அயனாவரம் சாலையிலுள்ள பெத்தேல் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மக்களிடையே தடுப்பூசி குறித்து கேட்டறிந்தார். அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்த, பல்வேறு இடங்களில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று திண்டுக்கல்லில் நடைபெறும் தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ரூ 200க்கு சிறப்பு கூப்பன், மேலும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை குழுக்கள் முறையில் தங்க காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை செல்போன் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

**வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *