மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: சிக்கன் போண்டா

ரிலாக்ஸ் டைம்: சிக்கன் போண்டா

ரிலாக்ஸ் டைமில் டீ, காபியுடன் சாப்பிட ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கள் இந்த சிக்கன் போண்டா செய்து சாப்பிட்டு நாள் முழுக்க புத்துணர்ச்சி பெறலாம்.

எப்படிச் செய்வது?

250 கிராம் சிக்கனை எலும்பில்லாமல் கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒரு கிண்ணத்தில் போடவும். 50 கிராம் சின்ன வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லித்தழை, இரண்டு துண்டு இஞ்சி, இரண்டு ஆர்க்கு கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். சிக்கனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், 50 கிராம் பொட்டுக்கடலை, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு, அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள், ஐந்து பூண்டு பற்கள், நறுக்கிய இஞ்சி, ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள், மூன்று டேபிள்ஸ்பூன் சிக்கன் மசாலா, தேவையான அளவு உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி அளவு தேங்காய்த்துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும். முக்கால் பாகம் வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். போண்டா மாவைக் கரைத்து, அதில் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.

சிறப்பு

அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். உற்சாகமடைவார்கள்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

ஞாயிறு 26 செப் 2021