மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 செப் 2021

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

தடுப்பூசி முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வு தரும் வகையில், திங்கள்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாத இறுதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால், வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இரண்டு மெகா தடுப்பூசி முகாம்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் ரத்த தான முகாமை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று(செப்டம்பர் 25) தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,” தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு 1700 ஆக அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மக்கள் நிலைமையை புரிந்துகொண்டு நடந்து கொள்ள வேண்டும். பொது இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதால்தான் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. காய்ச்சல் வந்த உடனேயே காலதாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 56 சதவிகிதத்தினர் தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்தியுள்ளனர். அதுபோன்று 17 சதவிகிதத்தினர் மட்டுமே இரண்டாம் தவணையை செலுத்திக் கொண்டுள்ளனர். 22 லட்சம் பேர் இரண்டாம் தவணையை செலுத்த தவறியுள்ளனர். அவர்கள் விரைவில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவே வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. கடந்த தடுப்பூசி முகாமின்போது தடுப்பூசி கையிருப்பு 16 லட்சம்தான் இருந்தது. ஆனால், நாளை நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம்களுக்கு தேவையான அளவு நம்மிடம் தடுப்பூசி உள்ளது. மக்கள் முறையாக இதைபயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதியோர்களும் கட்டாயம் இரண்டாம் தவணையை செலுத்திக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி முகாம்களில் மருத்துவத் துறையைச் சேர்ந்த களப்பணியாளர்கள் முகாம் நடைபெறுவதற்கு முன்பும், தடுப்பூசி செலுத்திய பிறகும் கடுமையாக உழைக்கின்றனர். அதனால், தடுப்பூசி போடும் பணியாளர்களுக்கு ஓய்வு தரும் வகையில் திங்கள்கிழமை தடுப்பூசி போடும் பணி நடைபெறாது ” என்று கூறினார்.

சென்னை தேனாம்பேட்டையில் 108 அவசர கால ஊர்தியின் சேவையின் கண்காட்சியை தொடங்கி வைத்த சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் இந்த தகவல்களை கூறியுள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சனி 25 செப் 2021