மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 செப் 2021

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்ட தொழில் செய்பவர்கள் ஆகியோர் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அனைத்து விதமான பணிகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுத்தான் மண் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது. அதனால், செங்கல் சூளை, மண்பாண்ட தொழில் செய்பவர்கள் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மண்பாண்டத் தொழில் செய்வோர், செங்கல் சூளை வைத்திருப்போர், நிலங்களை மேம்படுத்த வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள், சாலை மேம்பாடு செய்வோர், ஆகியோர் மண் எடுக்க சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று அறிவித்தார்.

இந்நிலையில் செங்கல் சூளை வைத்திருப்போர் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசாணையில் திருத்தம் செய்து மண் எடுப்பதற்கான தடையை நீக்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

அதன்படி, செங்கல் சூளை வைத்திருப்போர் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக் கொள்ளலாம். மண் எடுப்பதற்கான கட்டணத்தை செலுத்தி மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மண் எடுக்கலாம். மண் எடுக்கும் இடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வண்ணம் மரங்களை நட வேண்டும். கிராமப்புற சாலையிலிருந்து 10 மீட்டருக்குள்ளும், தேசிய நெடுஞ்சாலை, ரயில் பாதை, ஆறுகளில் இருந்து 50 மீட்டர் வரையிலும் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு விதித்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, மண் எடுப்பதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சனி 25 செப் 2021