மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 செப் 2021

ஆன்லைன் விளையாட்டு: பெற்றோர்கள் செய்ய வேண்டியவை!

ஆன்லைன் விளையாட்டு: பெற்றோர்கள் செய்ய வேண்டியவை!

ஆன்லைன் விளையாட்டுகளின் விபரீதம் குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது.

இன்றைய மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி அதன்மூலம் தவறான முடிவுக்கு செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 9-12 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டாலும், கொரோனா காரணமாக சின்ன வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் ஆன்லைன் வழியாகதான் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதனால் செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதன்மூலம் செல்போனை அதிகநேரம் பயன்படுத்தும் மாணவர்கள், ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிவிடுகின்றனர். அதனால் பலவித அசம்பாவிதங்களும் நடக்கின்றன.

ஆன்லைன் விளையாட்டை தடுக்க அரசுகளும் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இதுகுறித்து ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதில், மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதால் பல்வேறு விதமான பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

மாணவர்கள் எந்தெந்த ஆப்களை உபயோகிக்கிறார்கள், எந்த ஆப்பில் அதிக நேரம் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

தனிநபர் தகவல் பரிமாற்றம் செய்யவும், ஆப்களை விலைக்கு வாங்கவும் அனுமதிக்கக் கூடாது.

பெற்றோர்கள் தங்களின் டெபிட், கிரெடிட் கார்டுகள்,ஓடிபியை குழந்தைகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

ஆப் மற்றும் இணையதளம் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் செய்யவிடக் கூடாது.

இணையதளத்திலோ, அப்ளிகேஷனிலோ ஏதேனும் விபரீதமாக நிகழ்ந்துவிட்டால் உடனடியாக ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதை ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதை தடுத்து, படிப்பில் கவனம் செலுத்துவதற்கான முயற்சிகளை பெற்றோர்கள் எடுக்க வேண்டும்.

மாணவர்களின் நடத்தையில் ஏதும் வித்தியாசம் தெரிந்தால், உடனடியாக செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை சோதித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்லைன் விளையாட்டுகளின் விபரீதம் குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடத் தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 25 செப் 2021