மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: வாழைக்காய் மேத்தி கிரேவி

கிச்சன் கீர்த்தனா: வாழைக்காய் மேத்தி கிரேவி

காய்கறி முதல் பராத்தாக்கள் வரை எல்லா வகையான உணவுப்பொருட்களிலும் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. அதே அளவு பயன்தரக்கூடியது வெந்தயக்கீரை. காய்ந்த வெந்தயக் கீரை (கஸூரி மேத்தி)யில் இரும்புச்சத்து உட்பட பல சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளூகோஸின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை வாழைக்காய்க்கு உண்டு. இந்த இரண்டையும் சேர்த்து இந்த வாழைக்காய் மேத்தி கிரேவி செய்து இன்றைய புரட்டாசி சனிக்கிழமையில் வீட்டிலுள்ளவர்களுக்கு விருந்து படைக்கலாம்.

என்ன தேவை?

வாழைக்காய் - 2

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் + 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

பெல்லாரி வெங்காயம் - 2 (சிறியது)

தக்காளி - 2

மிளகாய்த்தூள், சீரகத்தூள் - தலா ஒன்றரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள், கஸூரி மேத்தி (காய்ந்த வெந்தயக்கீரை), அன்சால்டட் பட்டர் (உப்பில்லாத வெண்ணெய்) - தலா 2 டேபிள்ஸ்பூன்

ஃப்ரெஷ் க்ரீம் - அலங்கரிக்கத் தேவையான அளவு

உப்பு - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

வாழைக்காயைத் தோல் சீவி, சிறிய சதுரங்களாக நறுக்கவும். ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து பெருங்காயத்தூள், வாழைக்காயைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வெந்தவுடன் தனியே எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, இஞ்சி - பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். அதில் வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு மசாலா பொருள்களைச் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்துக் கரையும் வரை வதக்கி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் வாழைக்காய், பட்டர் சேர்த்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்கவைத்து, கஸூரி மேத்தி, க்ரீம் சேர்த்து சூடாக சப்பாத்தி / பரோட்டா உடன் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: வாழைக்காய் சுக்கா வறுவல்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சனி 25 செப் 2021