மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 செப் 2021

ரயில்வேயில் மீண்டும் பயிற்சி திட்டம்!

ரயில்வேயில் மீண்டும் பயிற்சி திட்டம்!

ரயில்வேயில் பயிற்சி திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 1927ஆம் ஆண்டு, ரயில்வேயில் பயிற்சி திட்டம் (அப்ரண்டிஸ்ஷிப்) தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த 94 ஆண்டுக்கால வழக்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ரயில்வேக்கு மத்திய நிதி அமைச்சகம் சிபாரிசு செய்துள்ளது.

ரயில்வேயைச் சீரமைப்பது குறித்து இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ரயில்வேயில் உள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சி தேவைப்படுகிறது. வழக்கமான கல்லூரி பட்டம் பெற்றவர்களுக்கு இத்தகைய பயிற்சி அளித்து தயார்படுத்துவது சிக்கலாக உள்ளது. ஆகவே, பழைய முறைப்படி பயிற்சி திட்டத்தை தொடங்கினால், திறமையான இளைஞர்களை அடையாளம் கண்டு, ரயில்வே துறைக்கேற்ப அவர்களை மாற்ற முடியும்.

இதுபோல், ரயில்வேயில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும். ரயில்டெல், ஐஆர்சிடிசி போன்ற அமைப்புகளையும் இணைக்க வேண்டும். ரயில்வே சார்பில் பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் நடத்துவதை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 24 செப் 2021