mஅக்டோபர் 1 முதல் ஏசி பேருந்துகள் இயக்கம்!

public

வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே தமிழக போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா பரவல் எதிரொலியாக ஏசி பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குத் தினமும் 75 லட்சம் ரூபாய் முதல் 1.25 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகப் போக்குவரத்துத் துறை தெரிவித்தது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக ஏசி பேருந்துகளை இயக்காமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தால் ஏசி இயந்திரங்கள் பழுதடையும், அதை மீண்டும் இயக்கத்திற்குக் கொண்டு வர பல லட்சம் ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போக்குவரத்துக் கழகங்கள் வருவாய் இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், ஏசி பேருந்துகளை இயக்கினால் வருவாய் இழப்பை ஓரளவு சரி செய்யலாம் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று (செப்டம்பர் 24) வெளியிட்ட அறிவிப்பில், “இயக்கப்படாமல் இருக்கும் ஏசி பேருந்துகளை இயக்க முதல்வர் மீண்டும் அனுமதி அளித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 702 குளிர்சாதனப் பேருந்துகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *