மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: தேன் மிட்டாய்!

ரிலாக்ஸ் டைம்: தேன் மிட்டாய்!

இது பாரம்பர்ய சுவைமிக்க நாவை சுண்டியிழுக்கும் நாட்டு திண்பண்டம் தேன் மிட்டாய். இதை நேரமிருக்கும்போது செய்து வைத்துக்கொண்டு ரிலாக்ஸ் டைமில் சுவைக்கலாம்; புத்துணர்ச்சி பெறலாம்.

எப்படிச் செய்வது?

ஒரு கப் பச்சரிசி, கால் கப் தோல் நீக்கிய உளுந்து இரண்டையும் ஐந்து மணிநேரம் ஊறவைத்து நன்கு அரைத்தெடுத்து சிறிதளவு ஆரஞ்சு ஃபுட் கலர், கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துவைக்கவும். பிறகு சர்க்கரைப் பாகு தயாரிக்க ஒன்றரை கப் சர்க்கரையில் முக்கால் கப் நீர் சேர்த்து அரை கம்பி பதத்துக்குக் காய்ச்சி அடுப்பை அணைத்து விடவும். இதில் சில சொட்டுகள் மட்டும் எலுமிச்சைச்சாறு விட்டு வைக்கவும். பிறகு சூடான எண்ணெயில், அரைத்து தயாராக உள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளி அதில் போட்டு நன்கு பொரித்து, உடனே அதை எடுத்து சர்க்கரை பாகில் முக்கி சிறிது நேரம் கழித்து எடுத்துவைத்தால் அருமையான தேன் மிட்டாய் தயார்.

குறிப்பு

விருப்பப்பட்டால் பாகில் ஊறிய மிட்டாய்களை எடுத்து தனியாக சர்க்கரையில் ஒரு புரட்டு புரட்டியும் கண்ணாடி டப்பாவில் எடுத்து அடுக்கிவைத்துக்கொண்டு மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை சாப்பிடலாம்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 24 செப் 2021