மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 செப் 2021

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்துக்குரிய 3 சதவிகிதம் அகவிலைப்படி உயரும் என்று ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்த்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 11 சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

தற்போது ஜூலை மாதத்துக்குரிய அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இந்த வார இறுதியில் மத்திய மந்திரி சபை கூடி அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 28 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இது 31 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. ஜூலை மாதத்தில் இருந்து இந்தத் தொகை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயன்பெறுவார்கள்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

வியாழன் 23 செப் 2021