மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 செப் 2021

உலக கார் இல்லாத தினம்: சைக்கிளில் சென்ற ஹரியானா முதல்வர்

உலக கார் இல்லாத தினம்: சைக்கிளில் சென்ற ஹரியானா முதல்வர்

ஆண்டுதோறும் செப்டம்பர் 22ஆம் தேதி ‘உலக கார் இல்லாத தினம்’ அனுசரிக்கப்படுகிறது. வாகன பெருக்கத்தைக் குறைக்கும் வகையிலும், உடல்நல பாதுகாப்பை அறிவுறுத்தும் வகையிலும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மோட்டார் வாகனங்கள் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

அவ்வகையில் நேற்று (செப்டம்பர் 22) உலக கார் இல்லாத தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, மோட்டார் வாகனங்கள் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது வீட்டில் இருந்து, சைக்கிளில் தலைமைச் செயலகத்துக்குச் சென்றார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும் சைக்கிள் ஓட்டிச் சென்றனர்.

-ராஜ்

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வியாழன் 23 செப் 2021