மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 செப் 2021

சென்னையில் மீண்டும் ஒரு ஸ்வாதி

சென்னையில் மீண்டும் ஒரு ஸ்வாதி

சென்னை, தாம்பரம் ரயில் நிலையம் அருகே மாணவி ஒருவர் இளைஞரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்கு காத்து கொண்டிருந்த மென்பொறியாளர் சுவாதி என்ற பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் கடந்த 2016 செப்டம்பர் 17ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். ஸ்வாதி எதற்காக கொலை செய்யப்பட்டார்? இதன் பின்னணி என்ன? உண்மையான குற்றவாளி யார்? உள்ளிட்ட முழுமையான விசாரணை முடிவுகள் இன்னும் வெளியே வரவில்லை. இந்த சம்பவத்தில் பல மர்மங்களுக்கு விடை தெரியாமல் இருக்கும் நிலையில், சென்னையில் இதேபோன்ற சம்பவம் இன்று(செப்டம்பர் 23) நடந்துள்ளது.

குரோம்பேட்டை ராதாநகரைச் சேர்ந்தவர் மதியழகன். மாநகர அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுவேதா. இவர் சென்னை தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் DMLT என்ற படிப்பை படித்து வந்தார். இன்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, ஸ்வேதாவை பார்ப்பதற்காக ராம்சந்திரன் என்பவர் கல்லூரி அருகில் வந்துள்ளார். இருவரும் தாம்பரம் ரயில் நிலையம் அருகில் பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஸ்வேதாவின் உடலில் சரமாரியாக குத்தியுள்ளார் ராம்சந்திரன். உடலில் பலத்த கத்தி குத்து வாங்கிய ஸ்வேதா நிலைகுலைந்து கீழே சரிந்து விழுந்தார்.

ஸ்வேதாவை குத்தியதோடு தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்தபோலீசார் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி ஸ்வேதா பரிதாபமாக உயிரிழந்தார். ராம்சந்திரனுக்கு காயம் ஏற்பட்ட இடத்தில் 9 தையல்கள் போடப்பட்டுள்ளதாக மருத்துவ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்த இளைஞரின் பெயர் ராமச்சந்திரன். திருக்குவளை பகுதியைச் சேர்ந்த இவர், சென்னை மறைமலை நகர் பகுதியில் தங்கி வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

ஸ்வேதாவுக்கும் ராம்சந்திரனுக்கும் ஏற்கனவே அறிமுகம் இருக்கிறதா? ஒருதலை காதல் விவகாரமா? என்ற கோணத்தில் சேலையூர் சரக உதவி ஆணையாளர் முருகேசன் தலைமையில் போலீசார் விசாரணை செய்து வருகிறன்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஸ்வேதாவின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குரோம்பேட்டை மருத்துவமனையில் மகளின் சடலத்தைப் பார்த்து தாய் கதறி அழுத காட்சிகள் கண் கலங்க வைத்தன.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 23 செப் 2021