மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 செப் 2021

அரசு பணியில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு மட்டுமே!

அரசு பணியில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு மட்டுமே!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

டிஎன்பிஎஸ்சி சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன்மூலம் தமிழ்நாட்டில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த தேர்வை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதி வருகின்றனர். கொரோனா காரணமாக அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பங்கேற்கும் குரூப்-2, குரூப்-2 ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்த அறிவிப்புகளை எதிர்நோக்கி லட்சக்கணக்கானோர் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

கொரோனா தொற்று குறைந்து வருவதால், குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், செயலாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் நேற்று(செப்டம்பர் 22) ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து இன்று(செப்டம்பர் 23) டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முறை, பொதுதகுதிக்கான நிபந்தனைகள், வயது வரம்பு சலுகை, இட ஒதுக்கீடு, பாடத்திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன.

One time registration எனப்படும் ஒருமுறை பதிவு 5 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். தேர்வர்களின் புகைப்படம், கையொப்பம் தெளிவாக இல்லையென்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத் தாள் கட்டாயமாக்கப்படும். அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீட்டினை 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று நடந்து முடிந்த சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவுரைகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30% என்று குறிப்பிடப்பட்டிருப்பது தேர்வர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 23 செப் 2021