மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: வாழைக்காய் வடை

கிச்சன் கீர்த்தனா: வாழைக்காய் வடை

ஆண்டு முழுக்க கிடைக்கக்கூடிய காய்களில் வாழைக்காயும் ஒன்று. அத்துடன் நல்ல வாழைக்காயாகப் பார்த்து வாங்கி வைத்துவிட்டால் இரண்டு மூன்று நாட்கள் பொறுத்தும் சமைக்கலாம். வாழைக்காயில் பஜ்ஜி செய்து சுவைத்திருப்போம். அதே வாழைக்காயில் வடை செய்தும் சாப்பிடலாம்.

என்ன தேவை?

வாழைக்காய் - 2

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கவும்)

இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

மல்லித்தழை - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

கடலை மாவு - 2 கப்

சோள மாவு (கார்ன் ஃப்ளார்) - ஒரு கப்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாழைக்காயைத் தோலுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்து நன்றாக மசித்துக்கொள்ளவும். மசித்த வாழைக்காயுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை, கடலை மாவு, கார்ன் ஃப்ளார், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: வாழைக்காய்ப் புட்டு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் - மோடியை வாழ்த்திய ...

5 நிமிட வாசிப்பு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் -  மோடியை வாழ்த்திய  கபில் சிபல்

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

அனிதா முதல் அனு வரை... : தொடரும் நீட் தற்கொலைகள்!

5 நிமிட வாசிப்பு

அனிதா முதல் அனு வரை... :  தொடரும் நீட் தற்கொலைகள்!

வியாழன் 23 செப் 2021