மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 செப் 2021

அனைத்து மொழிகளிலும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை!

அனைத்து மொழிகளிலும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை!

அக்டோபர் 21ஆம் தேதிக்குள் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை அனைத்து பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்படும் என்று ஒன்றிய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்டது. ஏப்ரல் மாதம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டு, அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையைத் தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை தொடர்பாக இரு அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கக் கோருவது ஏற்புடையதல்ல. அதனால், வரைவு அறிக்கை மீதான நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும். அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று மீனவர் நலச் சங்கம் என்ற அமைப்பின் தலைவர் தியாகராஜன் வழக்குத் தொடர்ந்தார்.

அதுபோன்று, வரைவு அறிக்கை பிரிவுகளை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதைத் தமிழில் வெளியிட்டால்தான், தமிழ்நாடு மக்களால் ஆட்சேபங்களைத் தெரிவிக்க முடியும் என்பதால், தமிழில் வெளியிட வேண்டும் எனவும், அதன் மீது கருத்துகளைத் தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் சார்பில் சுந்தரராஜன் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த இரு வழக்குகளும் இன்று(செப்டம்பர் 21) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து பிராந்திய மொழிகளிலும் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை அக்டோபர் 21ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும், அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும் ஒன்றிய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

வரைவு அறிக்கை குறித்த கருத்து கேட்பு விரிவாக நடத்த வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து,கருத்து கேட்பு விரிவாக நடத்துவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 8 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 22 செப் 2021