மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 செப் 2021

மகளிர் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி ரத்து!

மகளிர் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி ரத்து!

பேறுகால விடுப்பில் செல்லும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி ரத்து செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு அலுவலகத்தில் பணியாற்றும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு, இரண்டு குழந்தைகள் வரையில் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விடுமுறையை பிரசவத்திற்கு முன்பிருந்து, குழந்தைப் பிறப்புக்கு பின்புவரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு 1980 ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.பின்பு கடந்த 2011 ஆம் ஆண்டில் விடுப்பு காலம் 6 மாதங்களாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2016ஆம் ஆண்டில் மகப்பேறு கால விடுப்பு 9 மாத காலமாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் நடப்பு ஆண்டில் மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டு, அதற்கான அரசாணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதன்படி, 12 மாதங்கள் பேறு கால விடுப்பில் செல்லும் மகளிர் அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை படி ரத்து செய்யப்படும் என்று அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 22 செப் 2021