மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: வெஜ் பரோட்டா சிப்ஸ்!

ரிலாக்ஸ் டைம்: வெஜ் பரோட்டா சிப்ஸ்!

குழந்தைகளுக்கு பிடித்தமான சிப்ஸ் வகையை கடைகளில் வாங்கி கொடுப்பதை விட, வீட்டிலேயே எளிய முறையில் இந்த வெஜ் பரோட்டா சிப்ஸ் செய்து கொடுத்து அசத்தலாம்.

எப்படிச் செய்வது?

பரோட்டா செய்த உடனே தயாரிப்பதானால் ஒரு பரோட்டாவை எடுத்து அப்படியே துண்டுகளாக்கவும். பரோட்டா உலர்ந்து போயிருந்தால் ஆவியில் சில நிமிடங்கள் வேகவைத்து எடுத்த பிறகு துண்டுகளாக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளாருடன் சிறிதளவு உப்பு, தண்ணீர், அரை டீஸ்பூன் ஓமம், ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்துக் கரைக்கவும். இதை பரோட்டா துண்டுகளின் மீது பரலவாக ஊற்றிப் பிசிறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பிசிறி வைத்துள்ள பரோட்டா துண்டுகளை உதிர்த்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும் (அப்படியே மொத்தமாக எடுத்துப்போட்டுப் பொரித்தால் மொறுமொறுப்பாக வராது). அதனுடன் தேவையான அளவு சாட் மசாலாத்தூள், உலர் வெந்தயக்கீரை தூவிக் கலக்கவும். காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி சாப்பிடும் முன் எடுத்துப் பரிமாறவும். அப்போதுதான் மொறுமொறுப்பாக இருக்கும்.

சிறப்பு

உடனடி ஆற்றல் தரும் இந்த சிப்ஸ், வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. நாள் முழுக்க புத்துணர்ச்சி தரும்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 22 செப் 2021