மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: வாழைக்காய்ப் புட்டு

கிச்சன் கீர்த்தனா: வாழைக்காய்ப் புட்டு

வாழைக்காயைச் சிறிதளவு சாப்பிட்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைத்துவிடும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதிலிருக்கும் நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவும். இதிலுள்ள மாவுச்சத்து உடலுக்கு அதிக ஆற்றலைத் தரும். அப்படிப்பட்ட வாழைக்காயில் செய்யப்படும் இந்தப் புட்டு சுவையானது மட்டுமல்ல... ஆரோக்கியமானதும்கூட!

என்ன தேவை?

வாழைக்காய் – 2

தேங்காய்த்துருவல் – 3 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்)

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - கால் டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாழைக்காயைத் தோலுடன் உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்து, தோலுரித்து கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து சிவந்தபின் பச்சை மிளகாய், துருவிய வாழைக்காய் சேர்த்துக் கிளறவும். பிறகு, தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: வாழைக்காய்க் குழம்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 22 செப் 2021