மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துங்கள்: சுகாதாரச் செயலாளர்!

கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துங்கள்: சுகாதாரச் செயலாளர்!

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள சி.எஸ்.ஐ மருத்துவமனைக்கு, தனியார் நிறுவனம் சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (செப்டம்பர் 20) நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பிரபல சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளில் தனியார் நிறுவனங்கள் அரசுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் தற்போது டெக் மகேந்திர நிறுவனம் சார்பாக மூன்று ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளன. நம்மிடம் தடுப்பூசியின் கையிருப்பு குறைவாக இருந்ததால்தான் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 15 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடிந்தது. கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு சதவிகிதம் 18 ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.1 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. நாள்தோறும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்காகக் கூட்டம் கூடுவதைத் தாண்டி, எந்த ஒரு காரணத்துக்காகவும் அரசு நெறிமுறைகளை மீறி கூட்டம் கூடினால் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.

சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பேசுகையில், “கொரோனா நோய் எப்போது முடியும் என்று தெரியவில்லை. அதனால் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றினால் மட்டுமே கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும்” என்று கூறினார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 21 செப் 2021