மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

இரவு நேரத்தில் காதலியுடன் போனில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், கவனக்குறைவாக கிணற்றில் தவறி விழுந்ததோடு, பத்து மணி நேரத்துக்கு மேலாக தத்தளித்துக்கொண்டிருந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகில் இருக்கிறது புதன்சந்தப்பேட்டை. இந்தப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை இயங்கிவருகிறது. இந்த நூற்பாலையில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை பார்த்துவருகின்றனர். அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிக் என்ற இளைஞர், அந்தப் பகுதியில் தங்கி வேலை பார்த்துவருகிறார். இவர் ஒரு பெண்ணைக் காதலித்துவருவதாகச் சொல்லப்படுகிறது. நூற்பாலையில் பணி முடிந்ததும், ஓய்வு நேரத்தில் தினந்தோறும் அந்தப் பெண்ணுடன் ஆஷிக் செல்போனில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

இந்தநிலையில், ஆஷிக் தனியார் நூற்பாலையில் வேலை நேரம் முடிந்ததும், அந்த நூற்பாலைக்கு அருகேயுள்ள கிணற்றுப் பகுதியில் நின்று கொண்டு இரவு தனது காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, பேச்சு சுவாரஸ்யத்தில் கவனக்குறைவாக அருகிலிருந்த கிணற்றை கவனிக்காத ஆஷிக், கால் தவறி கிணற்றில் கீழே விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியான ஆஷிக், தன்னைக் காப்பாற்றுமாறு சத்தம் போட்டு உதவி கேட்டிருக்கிறார். ஆனால், இரவு நேரம் என்பதால், அவர் எழுப்பிய சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. இதனால், அந்த இளைஞர் கிணற்றிலேயே பத்து மணி நேரத்துக்கு மேலாகக் கிடந்திருக்கிறார். இரவு முழுவதும் அங்கேயே நடுங்கியபடி நேரத்தைக் கடத்தியிருக்கிறார்.

இந்த நிலையில், காலையில் அந்தப் பகுதி வழியே மக்கள் நடமாட்டத்தை அறிந்த ஆஷிக், மீண்டும் உரக்கச் சத்தம் எழுப்பி, உதவி கேட்டிருக்கிறார். கிணற்றுக்குள்ளிருந்து சத்தம் வரவும், அதிர்ச்சியடைந்த அந்த வழியே சென்ற சிலர், உடனடியாக அருகே சென்று, கிணற்றுக்குள் எட்டிப் பார்த்திருக்கிறார்கள். அப்போது, கிணற்றுக்குள் இளைஞர் ஆஷிக் தன்னைக் காப்பாற்றும்படி கூக்குரல் எழுப்புவதைக் கேட்டனர்.

இதையடுத்து அவர்கள் தீயணைப்புதுறை வீரர்களுக்குத் தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், கயிறு மூலம் அந்த இளைஞரை மீட்டனர். அதோடு, அவருக்கு கைமுறிவு ஏற்பட்டிருந்ததால், உடனடியாக ஆஷிக்கை பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அந்தக் கிணற்றில் ஏறி வருவதற்கு படிகள் இல்லாததால், ஆஷிக் 10 மணி நேரத்துக்கும் மேலாக கிணற்றுக்குள் தத்தளிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. 'காதலுக்குக் கண்ணில்லை' என்பது இவரது விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது என்கிறார்கள் பள்ளிப்பாளையம் மக்கள்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 21 செப் 2021