மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

பிரியாணியைத் தொடர்ந்து காலாவதியான குளிர்பானம்: எச்சரிக்கும் அதிகாரிகள்!

பிரியாணியைத் தொடர்ந்து காலாவதியான குளிர்பானம்: எச்சரிக்கும் அதிகாரிகள்!

உரிமம் இல்லாமல் கடைகளில் குளிர்பானங்கள் விற்கப்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று, சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த லக்ஷ்மன் சாய், ஓமேஷ்வர் என்ற சிறுவர்கள் வீட்டின் அருகே உள்ள கடையில் பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்டுள்ள டெய்லி என்ற குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளனர். குடித்த கொஞ்ச நேரத்திலேயே சிறுவர்களுக்கு மயக்கமும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அருகில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, தொடர்ந்து ரத்த வாந்தி எடுக்கவே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து குளிர்பானத்தை விற்பனை செய்த மளிகைக்கடையை ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். இன்று போலீசார் முன்னிலையில் மீண்டும் திறக்கப்பட்ட மளிகைக் கடையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காலாவதியான பல்வேறு நிறுவனங்களின் குளிர்பானங்கள், இட்லிமாவு உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இன்று புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அந்த கடையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் கூறுகையில்,”குளிர்பானம் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் குடித்த குளிர்பானத்தின் மாதிரிகளை எடுத்து சோதனைக்காக கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது அந்த குளிர்பானத்தை விநியோகித்த திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் குடோனிலும், அந்தக் குளிர்பானத்தை நாமக்கல் கிருஷ்ணகிரியில் தயாரிக்கும் நிறுவனத்திலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

10 ரூபாய்க்கு குளிர்பான பாட்டில் விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. முறையாக உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெறாமல் குளிர்பானம் விற்கக் கூடாது. தடையை மீறி விற்பனை செய்யும் கடைக்கு சீல் வைத்து வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உரிமம் இல்லாமல் இது போன்ற குளிர்பானங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணியில் கெட்டு போன இறைச்சியால் செய்யப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

செவ்வாய் 21 செப் 2021