மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

உணவு பாதுகாப்பு குறியீடு: எந்த இடத்தில் தமிழ்நாடு?

உணவு பாதுகாப்பு குறியீடு: எந்த இடத்தில் தமிழ்நாடு?

உணவு பாதுகாப்பு குறியீடு பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்வதில், மாநிலங்களின் பாதுகாப்பு செயல்பாடு குறித்து உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது. முதல் அறிக்கை 2019ஆம் ஆண்டு உலக உணவு பாதுகாப்பு தினமான ஜூன் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.

மக்கள்தொகைக்கு ஏற்ப உணவுத் துறையில் மனித வளங்கள் கிடைப்பது, தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்தல், நுகர்வோர் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்துதல், உணவு தரத்தை உறுதி செய்ய கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை காரணிகளை முன்னிறுத்தி உணவு பாதுகாப்பு குறியீடு பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று 2020-21 ஆம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு பட்டியலை வெளியிட்டார். அதில், பெரிய மாநிலங்களின் பட்டியலில் 72 புள்ளிகளை பெற்று குஜராத் முதலிடத்தையும், 70 புள்ளிகளை பெற்று கேரளா இரண்டாம் இடத்தையும், 64 புள்ளிகளை பெற்று தமிழ்நாடு மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதலிடத்திலும், மேகாலயா இரண்டாவது இடத்திலும், மணிப்பூர் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

யூனியன் பிரதேசங்களில் ஜம்மு-காஷ்மீர் முதலிடத்திலும், அந்தமான் நிக்போர் தீவுகள் இரண்டாம் இடத்திலும், டெல்லி மற்றும் சண்டிகர் மூன்றாம் இடத்திலும் உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

செவ்வாய் 21 செப் 2021