மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் திட்டம் 2015ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூக பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பின் மூலம் வீடு இல்லாதவர்களை கண்டறிந்து அதன் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு நிலம் வழங்கி வீடுகளும் கட்டித் தரப்படுகின்றன.

ஊரக பகுதியில் 2022க்குள் வீடுகள் இல்லாதவர்களுக்கும் மற்றும் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டி தருவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இதில் 60% ஒன்றிய அரசின் நிதியும், 40% மாநில அரசின் நிதி என்ற விகிதத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், நிலம் இல்லாத ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு நிலம் வழங்கும் பிரதம மந்திரியின் திட்டத்தை செயல்படுத்தவும், அதற்கு குழு ஒன்றை அமைக்கவும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு ஒன்றிய அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தது.

நிலம் இல்லாத விவசாயிகளுக்கு நிலம் அளிக்கும் பிரதம மந்திரியின் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை செயலாளர் கோபால் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில் குழுவின் தலைவராக ஊராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினராக நில நிர்வாக ஆணையரும், உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

செவ்வாய் 21 செப் 2021