மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: எள்ளு லட்டு!

ரிலாக்ஸ் டைம்: எள்ளு லட்டு!

அனைவராலும் தவிர்க்க முடியாத ஒன்று, நொறுக்குத் தீனி. வயது வித்தியாசம் இன்றி, எல்லோருமே ஏதேனும் ஒரு விதத்தில் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சாப்பாட்டை ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடுகிறோம் என்றால், இந்த ஸ்நாக்ஸ் வகைகளை இரண்டு முறையாவது சாப்பிடுகிறோம். அப்படிப்பட்ட நொறுக்குத் தீனியைச் சத்துமிக்கதாக சாப்பிடுவதற்கு இந்த எள்ளு லட்டு உதவும்.

எப்படிச் செய்வது?

100 கிராம் வெள்ளை எள்ளையும், 50 கிராம் வேர்க்கடலையையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக்கொண்டு பொடி செய்துகொள்ளவும். வேர்க்கடலையின் தோலை நீக்கவும். 10 முந்திரியை சிறு துண்டுகளாக்கவும். 100 கிராம் சர்க்கரையை தேவையான தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கெட்டியான பாகாக காய்ச்சி, பொடி செய்த எள்ளு, வேர்க்கடலை, முந்திரியையும் போட்டுக்கிளறி கீழே இறக்கி சிறிது ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

சிறப்பு

இதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து ஆகியவை உள்ளன. அனைவருக்கும் ஏற்றது.

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

செவ்வாய் 21 செப் 2021