மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: வாழைக்காய்க் குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வாழைக்காய்க் குழம்பு

ஆப்பிளைவிட நான்கு மடங்கு அதிக புரதம், இரண்டு மடங்கு அதிக கார்போஹைட்ரேட், மூன்று மடங்கு அதிக பாஸ்பரஸ், ஐந்து மடங்கு அதிக வைட்டமின் ஏ, இரும்புச்சத்து இரு மடங்கு வாழைக்காயில் உள்ளன. ஆனால் ‘வாழைக்காய் சாப்பிட்டால் வாய்வு’ என்று பலரும் வெறுத்துகிறார்கள். இந்த செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய்க் குழம்பை ஒருமுறை செய்து ருசியுங்கள். வாழைக்காயின் அருமை புரியும்.

என்ன தேவை?

வாழைக்காய் - 2

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)

பூண்டு - 6 பல் (தட்டிக்கொள்ளவும்)

சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்

புளிக்கரைசல் - சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

வறுத்த வேர்க்கடலைப் பொடி - சிறிதளவு

தாளிக்க:

கடுகு - கால் டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

வெந்தயம் - சிறிதளவு

பெருங்காயம் - சிறிதளவு

சீரகம் - கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாழைக்காயைத் தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து சிவந்ததும் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் வாழைக்காயைச் சேர்த்து வதக்கியதும் சாம்பார் பொடி சேர்க்கவும். இதில் புளிக் கரைசல் சேர்த்து உப்பு போட்டு, மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். வாழைக்காய் நன்கு வெந்தபின் வேர்க்கடலை பொடி தூவி இறக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: வாழைக்காய் ஃப்ரைஸ்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

செவ்வாய் 21 செப் 2021