மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 செப் 2021

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர், கணினி ஆசிரியர்கள் ஆகியவற்றுக்கான ஆன்லைன் தேர்வின்போது முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்க நேரிடும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி, உடற்கல்வி இயக்குநர் (கிரேடு 1), கணினி ஆசிரியர் (கிரேடு 1) பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான போட்டித் தேர்வு கணினி வழியில் நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத் தேர்வு விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது.

ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தமிழ்நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் கணினி வழி தேர்வினை எழுத தயாராக இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு மட்டுமே அதற்கான சான்றிதழ் சரிபார்த்தப்பின் அவர்களுக்கு அருகில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும்.

தேர்வர்களுக்குத் தேர்வுக்கு ஏழு நாட்களுக்கு முன்பாக எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும், மூன்று நாட்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் விவரமும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும்.

தேர்வு மைய விவரத்துடன் கூடிய அனுமதிச்சீட்டு தேர்வர்களுக்கு இணையவழி மூலமாக மட்டுமே அனுப்பப்படும்.

தேர்வு மையங்களில் முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்கள் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எந்தவொரு தேர்வுகளிலும் கலந்துகொள்ள தடை விதிக்கப்படும். மேலும் ஆயுட்கால தடை விதிக்கவும் வாய்ப்பு ஏற்படலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திங்கள் 20 செப் 2021