மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 செப் 2021

சிவகாசி அருகே வெடி விபத்தில் ஒருவர் பலி!

சிவகாசி அருகே வெடி விபத்தில் ஒருவர் பலி!

சிவகாசி அருகே சரஸ்வதி பாளையத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அங்கு பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதுபோன்று வெடி விபத்துக்களும் சமீப காலமாக அதிகளவில் நடக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சரஸ்வதி பாளையத்தில் கோடீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அனுமதி பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 20க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று(செப்டம்பர் 20) வழக்கம்போல் ஆலையின் ஒரு பகுதியில் ரோல் கேப் தயாரிக்கும்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டது. இதில், சிவகாசியை சேர்ந்த சின்ன முனியாண்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒன்பது மாத காலத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் கூட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பட்டாசு ஆலைகள் முறையான அனுமதியுடன் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு செயல்படுகிறதா என கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வந்தாலும் விபத்துகளும் தொடர்ந்துகொண்டே வருகிறது.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

திங்கள் 20 செப் 2021