மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 செப் 2021

பி.இ.கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர்!

பி.இ.கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர்!

அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதேபோல் தொழிற்கல்விப் படிப்பிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குவதற்காக டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தொழிற்கல்விப் படிப்புகளான பொறியியல், கால்நடை, மீன்வளம், சட்டம், வேளாண்மை உள்ளிட்டவைகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டு நடப்பு ஆண்டில் அமலுக்கு வந்துள்ளது.

தற்போது பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை கிண்டியில் 7.5 % இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பை தேர்வு செய்த அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று(செப்டம்பர் 20) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பொறியியல் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கிய பின் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட இயக்கத்தின் நோக்கம் அனைவருக்கும் கல்வி என்பதுதான். படிப்பவர்களுக்கு லெனின் கூறிய மூன்று முக்கிய இலக்கு படிப்பு, படிப்பு, படிப்பு. பொறியியல் பட்டதாரி ஆக வேண்டும் என்ற மாணவர்களின் கனவு நிறைவேறும் நாள். வேலைக்கு செல்வதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக மாணவர்கள் மாற வேண்டும். அரசுப் பள்ளியில் படித்து 7.5% இடஒதுக்கீட்டில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை தமிழ்நாடு அரசே ஏற்கும். 11,000 ஏழை மாணவர்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள். நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 10ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களும், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் ஆகியவற்றில் 350 மாணவர்களும் பயன்பெற உள்ளனர். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக இந்த ஆட்சி மாற வேண்டும் ” என்று கூறினார்.

இந்நிகழ்வில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

திங்கள் 20 செப் 2021