மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: வாழைக்காய் ஃப்ரைஸ்

கிச்சன் கீர்த்தனா: வாழைக்காய் ஃப்ரைஸ்

உலகின் முக்கியமான தாவரங்களில் வாழையும் ஒன்று. வாழை மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவை. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி என எதுவும் வீணாகாது. அந்த வகையில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் வாழைக்காய் பசியை அடக்கும் ஆற்றல் கொண்டது. இத்துடன் மிளகு சேர்த்துச் சமைப்பது நல்லது. இதன் மேல் தோலை மெலிதாகச் சீவியெடுத்துவிட்டு உட்புறத் தோலுடன் சமைத்தால், தோலிலிருக்கும் சத்துகள் அனைத்தும் உடலுக்குக் கிடைக்கும்.

என்ன தேவை?

வாழைக்காய் - 3

கடலை மாவு - அரை கப்

அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்

சோள மாவு (கார்ன்ஃப்ளார்) - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வாழைக்காயின் மேல் தோலை மெலிதாகச் சீவியெடுத்துவிட்டு, விரல் நீளத் துண்டுகளாக நறுக்கி, குளிர்ந்த நீரில் போட்டுவைக்கவும். மாவு வகைகள், உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்துவைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, வாழைக்காய் துண்டுகளை மாவில் பிசிறி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

நேற்றைய ஸ்பெஷல்: வீட்டிலேயே ஆந்திரப் பருப்புப் பொடி!

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

திங்கள் 20 செப் 2021