மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கான பரிசுகள்!

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கான பரிசுகள்!

தமிழ்நாட்டில் இன்று இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி குறித்து மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தநிலையில், அதுகுறித்து மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலிகளுக்கு வெள்ளிக்காசு, தங்க நாணயம், புடவை உள்ளிட்ட பல பரிசுகள் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று(செப்டம்பர் 19) நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 2 சென்ட் வீட்டுமனை 10 பேருக்கு வழங்கப்படும் என ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதுபோன்று இன்று தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 3 பேருக்கு ஆண்ட்ராய்டு செல்போன் வழங்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

அரியலூரில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மிஷின் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என்று நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளினால் மேற்கண்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் முகாம்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

ஞாயிறு 19 செப் 2021