மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: மட்டன் பக்கோடா!

ரிலாக்ஸ் டைம்: மட்டன் பக்கோடா!

புரட்டாசி மாதத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வாரத்துக்கு ஒருநாளாவது பெரும்பான்மையானவர்களுக்கு மட்டன் சாப்பாடு வேண்டும் என்ற திட்டம் இருக்கும். மட்டன் சமையலில் கொழுப்பு கொஞ்சம் தூக்கல் என்றாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு கை பார்க்க நினைப்பார்கள். இவர்களின் மனதும் வயிறும் நிறைய மட்டனில் இந்த பக்கோடா செய்து ரிலாக்ஸ் டைமில் சுவைக்கலாம்.

எப்படிச் செய்வது?

எலும்பு இல்லாத கால் கிலோ மட்டனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி சுத்தம் செய்து தனியாக வைத்துக்கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், இரண்டு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசிறி வெயிலில் அரை மணி நேரம் வைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தீயை முற்றிலும் குறைத்து மட்டன் துண்டுகளைச் சேர்த்து அது வேகும் வரை எண்ணெயிலேயே பொரியவிட்டு எடுக்கவும். இறுதியாக எண்ணெயில் பொரித்த கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

சிறப்பு

மட்டனில் உள்ள நல்ல கொழுப்புகள் நம் உடலை ஆரோக்கியம் குறையாமல் காக்கும். குறிப்பாக கருத்தரிப்பதில் பிரச்சினை இருப்பவர்கள், விறைப்புத்தன்மை குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டன் சிறந்த உணவு.

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

ஞாயிறு 19 செப் 2021