மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - வீட்டிலேயே ஆந்திரப் பருப்புப் பொடி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - வீட்டிலேயே ஆந்திரப் பருப்புப் பொடி!

புரட்டாசி மாதம் தொடங்கிவிட்ட நிலையில், அசைவ உணவைத் தவிர்ப்பவர்கள் பலர். இந்த நேரத்தில் மதிய உணவின் தொடக்கத்தில் பருப்புப் பொடி இருந்தால் உணவின் சுவை கூடும் என்று நினைப்பார்கள். மேலும், பருப்புப் பொடியில் இருக்கும் மிளகும் உப்பும் உமிழ்நீரைச் சுரக்கச் செய்து ஜீரணத்துக்குப் பெரிதும் உதவும். இப்படிப்பட்ட பொடி வகை, ஆந்திர ஹோட்டல்களில் அங்குள்ள சாப்பாட்டு மேஜைகளில் நிச்சயம் இடம்பிடிக்கும். இந்தப் பருப்புப் பொடியை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?

ஆந்திரா ஸ்டைல் பருப்புப் பொடி தயாரிக்க... துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உளுத்தம் பருப்பு - 50 கிராம், பயத்தம்பருப்பு (உடைத்த பாசிப்பருப்பு) - 50 கிராம், பொட்டுக்கடலை - 50 கிராம், மிளகு - 75 கிராம், சீரகம் - 25 கிராம், வெள்ளை எள் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 10 பெருங்காயத்தூள் அல்லது கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு, பூண்டு (உரித்தது) - 20 பற்கள், உப்பு - தேவையான அளவு.

கடாயைச் சூடாக்கி, எண்ணெய் இல்லாமல் பருப்பு வகைகளைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். பூண்டு பற்கள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிது எண்ணெய்விட்டு வதக்கி எடுக்கவும். கட்டிப் பெருங்காயம் என்றால் எண்ணெய் விட்டு பொரித்துக்கொள்ளவும். மிளகு, சீரகம், வெள்ளை எள் ஆகியவற்றை லேசாக வறுக்கவும். தேவையானால், காய்ந்த கறிவேப்பிலை ஒரு கைப்பிடி சேர்க்கலாம். எல்லாவற்றையும் மிக்ஸியில் உப்பு சேர்த்து பொடியாக அரைக்கவும். சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெயுடன் பருப்புப் பொடி சேர்த்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

நேற்றைய ரெசிப்பி: கைக்குத்தல் அவல் லட்டு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

ஞாயிறு 19 செப் 2021