மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

நாய்களை பராமரிப்பது ஐஐடியின் வேலை அல்ல!

நாய்களை பராமரிப்பது ஐஐடியின் வேலை அல்ல!

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களை முறையாக பராமரிக்கக் கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நேற்று(செப்டம்பர் 17) தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், கடந்த 6 மாதங்களில் ஐஐடியில் 49 நாய்கள் இறந்துள்ளதாகவும், கூட்டுக்குழு ஆய்வறிக்கையில் 14 நோய்வாய்ப்பட்ட நாய்கள் இருப்பதாகவும், அவற்றை கால்நடை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும், எத்தனை நாய்கள் இறந்துள்ளது என்பது குறித்து கணக்கீடு செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஐஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் ஐஐடி வளாகத்தில் உள்ளன. வீட்டில் பராமரிக்க முடியாதவர்கள் நாய்களை இங்கு விட்டுச் செல்வதால் நாய்கள் எண்ணிக்கை அதிகமாகின்றன. இந்த நாய்களை பராமரிப்பதற்காக தனி இடம் அமைக்கப்பட்டு பராமரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

விலங்குகள் நல வாரியம் மற்றும் மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஐஐடியில் நாய்கள் முறையாக பராமரிக்கப்படுவதாக தெரவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஐஐடி வளாகம், உயிரியல் பூங்காவோ, நாய்கள் பூங்காவோ அல்ல எனவும், நாய்களை பராமரிப்பது ஐஐடியின் பணியல்ல எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், கைவிடப்பட்ட நாய்களை விடும் பகுதியாக ஐஐடி மாறாமல் மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், ஐஐடி வளாகத்தில் ஏராளமான மான்கள் இருப்பதால், அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 18 செப் 2021