மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்!

மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று 1,600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் விரைந்து தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சென்னையில் முக்கிய இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. மேலும், ஒரு வார்டுக்கு இரண்டு தடுப்பூசி முகாம் என்ற வகையில் 200 வார்டுகளில் 400 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இதையடுத்து கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி சென்னையில் 1,600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்ததையடுத்து, வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அதன்படி, வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மொத்தம் 1,600 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் அமைக்கப்பட்டதுபோன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

முன்னதாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

அதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், கடந்த வாரம் மிக சிறப்பாக நடத்தியது போல வருகிற நாட்களில் நடக்கின்ற முகாம்களில் மக்களை கொண்டு வந்து சேர்க்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரேநாளில் 2 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பித்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 18 செப் 2021