மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வீட்டுக்கடன் உட்பட மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு கடன்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வழங்கி வருகிறது. அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வீட்டுக்கடனில் வட்டியைக் குறைத்து அறிவித்திருக்கிறது.

எஸ்பிஐ விழாக்கால சலுகையாக இனி வீட்டுக்கடன் வாங்குபவர் 6.7 சதவிகிதத்துக்கும் குறைவான வட்டி விகிதத்தில் எந்தத் தொகைக்கும் வீட்டுக்கடன் பெறலாம். இதற்கு முன்பு வீட்டுக்கடன் ரூ.75 லட்சத்துக்கு மேல் வாங்கியவர்களுக்கு வட்டி 7.15 சதவிகிதம் ஆக இருந்தது. இந்த அதிரடி வட்டி குறைப்பின் மூலம் மாதந்தோறும் செலுத்தும் இஎம்ஐ தொகையும் குறையும்.

முன்னதாக சம்பளதாரர்கள் மற்றும் சம்பளம் அல்லாதவர்களுக்கு என வட்டி விகிதம் மாறுபடும். சம்பளம் வாங்குபவர்களைவிட சம்பளம் அல்லாதவர்களுக்கு வட்டி விகிதம் அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்தச் சலுகையின் மூலம் சம்பளம் அல்லாதவர்கள் கூடுதல் வட்டி செலுத்த தேவையில்லை. எஸ்பிஐ வழங்கி இருக்கும் இந்தச் சலுகை அதிகளவில் கடன் வாங்குவோருக்கு 45 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைவாக கிடைக்கும்.

வட்டி குறைப்பு மட்டுமல்லாமல் செயல்பாட்டு கட்டணத்தையும் 100 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்துள்ளது. இருப்பினும் இந்த வட்டி சலுகைகள் அவரவர் சிபில் ஸ்கோரினைப் பொறுத்தது என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சனி 18 செப் 2021