மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

கிருஷ்ணகிரி : சொத்துக்காக முதியவர் கொலை!

கிருஷ்ணகிரி : சொத்துக்காக முதியவர் கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி தோட்டத்திற்குச் சைக்கிளில் சென்ற முதியவரை, மர்ம கும்பல் ஒன்று மடக்கி கொடூரமாகக் கொலை செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட சீலேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 67 வயதான முதியவர் வெங்கட்டப்பன். இன்று (செப்டம்பர் 18) காலை 6.30 மணிக்குத் தனது வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தக்காளி தோட்டத்திற்கு மிதி வண்டியில் சென்றார்.

தக்காளி தோட்டத்தில் வெங்கட்டப்பனுக்காக காத்திருந்த ஐந்துபேர், திடீரென பாய்ந்து வெங்கட்டப்பன் கழுத்தில் வெட்டியுள்ளனர். அப்போது தப்பித்துக்கொள்ள மாதிநாராயன பள்ளி கிராம சாலைக்கு, ரத்தம் சொட்டச் சொட்ட வலியுடன் ஓடிவந்தவரை விரட்டி சென்று ஈவு இரக்கம் இல்லாமல் கழுத்திலேயே வெட்டி சாய்த்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி காவல் துறையினர் விசாரித்ததில் சொத்து பிரச்சனை தான் கொலைக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட வெங்கட்டப்பன் மகன் முருகேசன். ஓசூர் டைட்டன் கம்பெனி கேண்டீனில் சமையல்காரராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதன் பிறகு முருகேசன் மனைவி ஜமுனா, மகன்கள் வெங்கடேசன், வேலன் மூவரும் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்துவிட்டனர். இதுதொடர்பாக குருபரபள்ளி காவல் நிலையத்தில் குற்ற எண் 751/2021 விபத்து வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடமாகவே விபத்தில் இறந்துபோன ஜமுனாவின் தம்பி கார்த்திக், மாமனார் வெங்கட்டப்பனிடம் சொத்தில் பங்கு கேட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார். இது சம்பந்தமாகக் காவல்நிலையம் வரையில் பஞ்சாயத்தும் நடந்துள்ளது.

இந்நிலையில், வெங்கட்டப்பனையும் கொலைசெய்து விட்டால் அனைத்து சொத்துகளையும் கைப்பற்றிக்கொள்ளலாம் என்ற முடிவில்தான் கொலைசெய்துள்ளார் ஜமுனா தம்பி கார்த்திக் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். எனவே, ஜமுனா இரண்டு மகன்களுடன் விபத்தில் இறந்ததாகச் சொல்லப்படுவது, கொலையா விபத்தா என்றும் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சொத்து, கந்துவட்டி, கட்டப்பஞ்சாய்த்து, இடம் பிரச்சனைகளால் இங்கு அதிகமாகக் கொலைகள் நடப்பதாக அம்மாவட்ட மக்கள் கூறுகின்றனர்.

-வணங்காமுடி

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

சனி 18 செப் 2021