மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: முள்ளங்கி சூப்!

ரிலாக்ஸ் டைம்: முள்ளங்கி சூப்!

குழம்பு, கூட்டு, பொரியலில் பயன்படுத்தும் முள்ளங்கியைச் சூப் செய்து அருந்தினால் மலச்சிக்கல் பிரச்சினையைப் போக்கும். உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ள முள்ளங்கியில் அதிக நோய் எதிர்ப்பு சக்திக்கான ஆற்றல் அதிகம்.

எப்படிச் செய்வது?

ஒரு கப் முள்ளங்கி இலையை நன்றாகச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி காய வைத்து கால் டீஸ்பூன் சீரகத்தை போட்டு பொரிந்ததும், முள்ளங்கி இலை, முள்ளங்கி இரண்டையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் அரைத்த விழுது, சூப் பதத்துக்குத் தேவையான தண்ணீர்விட்டு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு கொதிக்கவைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

சிறப்பு

இது பசியின்மை, காய்ச்சல் மற்றும் தொண்டை வீக்கம் போன்ற பிரச்சினைகளையும் குணப்படுத்தும். உடனடி புத்துணர்ச்சி தரும்.

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

சனி 18 செப் 2021