மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 17 செப் 2021

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கோவையும் சென்னையும்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கோவையும் சென்னையும்!

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குறைவான குற்றங்கள் நடக்கும் இடங்களில் கோவை முதல் இடத்திலும் சென்னை இரண்டாம் இடத்திலும் உள்ளன. அதிக குற்றங்கள் பதிவான பெருநகரங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ முதல் இடம்பிடித்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களில் தொடர்பாக கடந்த ஆண்டு (2020) பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்தியாவில் 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறைவாக பதிவான பெருநகரங்களில் தமிழ்நாட்டின் கோவை முதல் இடத்தையும், சென்னை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.

கோவை பெருநகரத்தை பொறுத்தவரை சராசரியாக ஒரு லட்சம் பெண்களில் 9 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது எனவும், சென்னையைப் பொறுத்தவரை சராசரியாக ஒரு லட்சம் பெண்களில் 13.4 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, சென்னையை அடுத்து பெண்களுக்கு எதிரான குறைவான குற்ற சம்பவங்கள் பதிவான பெருநகரங்களில் மூன்றாவது இடத்தில் கேரளாவின் கொச்சி நகரம் இடம்பெற்றுள்ளது. கொச்சியில் சராசரியாக ஒரு லட்சம் பெண்களில் 37.5 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவின் மும்பையில் சராசரியாக ஒரு லட்சம் பெண்களில் 53.8 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் பெங்களூரில் ஒரு லட்சம் பெண்களில் 67.3 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

பெண்களுக்கு எதிராக அதிக குற்ற சம்பவங்கள் பதிவான பெருநகரங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ முதல் இடத்தில் உள்ளது. லக்னோவில் சராசரியாக ஒரு லட்சம் பெண்களில் 190.7 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக என தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவித்துள்ளது.

2018-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் 27,866 குற்றங்கள் பதிவாகியிருந்த நிலையில். 2019ஆம் ஆண்டு 41,550 குற்றங்கள் பதிவாகியிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை 2017 - 5,397, 2018 - 5,822, 2019 - 5,934 என்ற எண்ணிக்கையில் குற்றங்கள் பதிவாகியிருக்கின்றன. அதேபோல இந்திய அளவில் மிகக்குறைந்த அளவில் 33 குற்றங்கள் டையூ - டாமனில் பதிவாகியிருக்கிறது.

கடந்த (2020) ஆண்டு பெண்களுக்கு எதிராக மொத்தம் 3,71,503 வழக்குகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை (4,05,236) விட குறைவு ஆகும். கடந்த ஆண்டில் பதியப்பட்ட பெண்களுக்கு எதிரான மொத்த வழக்குகளில் கற்பழிப்பு சம்பவங்கள் மட்டுமே 27,046 ஆகும். இதில் பாதிக்கப்பட்ட 25,498 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும், 2,655 பேர் சிறுமிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 77 கற்பழிப்பு வழக்குகள் கடந்த ஆண்டு பதிவாகி இருக்கிறது. மாநிலங்களை பொறுத்தவரை ராஜஸ்தானில் அதிகபட்சமாக 5,310 கற்பழிப்பு வழக்குகள் கடந்த ஆண்டு பதிவாகி உள்ளன. அடுத்ததாக உத்தரப்பிரதேசம் (2,769), மத்திய பிரதேசம் (2,339), மராட்டியம் (2,061), அசாம் (1,657) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

கற்பழிப்பு சம்பவங்களை தவிர கணவர் மற்றும் உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வகையில் 1,11,549 வழக்குகள் பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 17 செப் 2021