மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 17 செப் 2021

காவல் நிலையங்களின் பெயர் பலகை: டிஜிபி உத்தரவு!

காவல் நிலையங்களின் பெயர் பலகை: டிஜிபி உத்தரவு!

காவல் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் இடம்பெற்றுள்ள தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 1541 காவல் நிலையங்கள் உள்ளன. அதில் 203 மகளிர் காவல் நிலையங்கள். தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து காவல் நிலையங்களில் உள்ள பெயர் பலகையை வைக்க முன் வருகின்றன. அவ்வாறு நன்கொடையில் வைக்கப்படும் பலகையில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களும் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக இன்று(செப்டம்பர் 17) தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘சில காவல் நிலைய பெயர் பலகைகளில் இடம்பெற்றுள்ள தனியார் நிறுவனங்களின் பெயர்களால் மக்கள் மத்தியில் தவறான புரிதல் ஏற்படுகிறது. அனைத்து காவல் நிலைய பெயர் பலகைகளில் காவல்நிலைய பெயரைத் தவிர, விளம்பரதாரரின் பெயர்கள் இடம் பெற்றிருக்க கூடாது,அவ்வாறு இருந்தால் அதனை உடனடியாக நீக்க வேண்டும். அதற்கு பதிலாக புதிய பெயர் பலகைகளை வைக்க வேண்டும். அவ்வாறு புதிய பெயர் பலகைகளை வைக்க காவல் நிலையத்தின் முன்பணத்தை செலவிட்டு கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 17 செப் 2021