மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 17 செப் 2021

தேநீர் கடைக்காரரின் பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்!

தேநீர் கடைக்காரரின் பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்!

புதுக்கோட்டையில் தேநீர் கடைக்காரர் ஒருவர், தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.

இன்று(செப்டம்பர் 17) பெரியாரின் 143வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெரியார் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார். அதுபோன்று அனைத்து அரசு அலுவலகங்கள்,பள்ளிகளிலும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

இந்நிலையில் பெரியாரின் பிறந்தநாளை அவர் எழுதிய புத்தகத்தை மக்களுக்கு இலவசமாக வழங்கி கொண்டாடியுள்ளார் தேநீர் கடைக்காரர்.

பெரியாரின் ’பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகம் மிகவும் பிரபலமானது. இது 90 ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் தேவையை தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த காலத்திலேயே பாலின சமத்துவத்தைப் பேசிய புத்தகம் இதுதான். உலகிலேயே முதல்முறையாக பெண் விடுதலை பற்றிப் பேசியது பெரியார்தான் என்ற வகையில் அந்த புத்தகம் சிறப்பு வாய்ந்தது.

புதுக்கோட்டை அருகே வம்பன் பகுதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் சிவக்குமார். இவர் அப்பகுதியில் தன்னால் முடிந்த சமூக சேவைகளை செய்து வருகிறார்.

பெரியாரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சிவக்குமார், தன்னுடைய கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பெண்கள், கல்லூரிகள் மாணவர்கள் என அனைவருக்கும் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தை இலவசமாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கூறும் சிவக்குமார்,” கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள், கல்லூரி மாணவிகள் பெரியாரை தெரிந்துகொள்ளும் வகையில் அவருடைய புத்தகத்தை இலவசமாக வழங்கினேன்” என்றுகூறினார்.

கஜா புயலின்போது தன்னுடைய கடைக்கு வந்த அனைத்து பொது மக்களுக்கும் இலவசமாக தேநீர் வழங்கினார். கொரோனா தொற்று காலத்தில் தன்னுடைய தேநீர் கடையில் மொய் விருந்து வைத்து அதில் வந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். இதுபோன்று பல்வேறு சமூக பணிகளை சிவக்குமார் செய்து வருகிறார்.

சில இடங்களில் திமுகவினரும் கல்லூரி மாணவர்களுக்கு பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தை விநியோகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வெள்ளி 17 செப் 2021