மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 17 செப் 2021

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

தமிழ்நாட்டில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பான சிறந்த மீம்ஸ்களுக்கு ரூ.1000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

நாட்டில் நடக்கும் நடப்பு நிகழ்வுகளோடு சினிமாவில் வரும் நகைச்சுவை மற்றும் சமூக கருத்துக்களை இணைத்து வெளியிடப்படும் மீம்ஸ்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒரு கருத்தை பிரச்சாரங்கள் மற்றும் கைபிரதி மூலமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதைவிட மீம்ஸ் மூலம் எளிதில் கொண்டு சேர்த்து விடலாம். அந்தளவுக்கு மக்களிடையே மீம்ஸ் வரவேற்பு பெற்றுள்ளது.

கொரோனா காலத்தில் அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து மக்களிடையே வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒருசில இடங்களில் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்காமல் இருப்பதை காண முடிகிறது.

இந்த நிலையில் கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

அதாவது, மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சிறந்த மீம்ஸ்களை உருவாக்குபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். அதன்படி, கொரோனா விழிப்புணர்வு தொடர்பான சிறந்த 10 மீம்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிற்கும் ரூ.1,000 வரை பரிசுத் தொகை வழங்கப்படும். மீம்ஸ்களை பதிவிட வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 18. மீம்ஸ் பதிவிடுபவர்கள் @TiruvallurCollr-ஐ டேக் செய்ய வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வெள்ளி 17 செப் 2021