மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 17 செப் 2021

ஏடிஎம் மையத்தில் இயந்திரத்துடன் பணம் கொள்ளை!

ஏடிஎம் மையத்தில் இயந்திரத்துடன் பணம் கொள்ளை!

அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூரில் தனியார் ஏடிஎம் மையத்தில் இயந்திரத்துடன் 4.50 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்து சென்றவர்களை பிடிப்பதற்காக இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் ஏடிஎம் கொள்ளை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட, மாநிலம் முழுவதும் உள்ள எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்களை குறி வைத்து நடந்த நூதன கொள்ளை சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு அருகில் 5 கிலோமீட்டர் தொலைவில் ஆக்ஸிஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. அந்த ஏடிஎம்மில் சிசிடிவி கேமராவும் கிடையாது, பாதுகாவலரும் கிடையாது. இந்த நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து, ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக வெல்டிங் செய்து துளையிட்டு ஏடிஎம் இயந்திரத்தை வெளியே எடுத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை பணம் எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவர், ஏடிஎம் மையத்தில் இயந்திரம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதையடுத்துதான், ஏடிஎம் மையத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து அரக்கோணம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். இதையடுத்து, ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்தவர்களை கண்டுபிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் தேதி இந்த ஏடிஎம் மையத்தில் சுமார் ரூ.8.50 லட்சம் பணம் நிரப்பப்பட்ட நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அதனால், 4.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

வெள்ளி 17 செப் 2021