மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

ஐபிஎல்: நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி!

ஐபிஎல்: நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. 2021ஆம் ஆண்டின் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் வரும் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் துபாயில் நடைபெற இருக்கும் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதை ஐபிஎல் நிர்வாகம் முறைப்படி அறிவித்துள்ளது.

மேலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை www.iplt20.com மற்றும் PlatinumList.net என்ற இணையதளத்திலும் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் அமீரகத்தில் இரண்டாம்கட்டமாக ஐபிஎல் தொடங்க இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆடுகளங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததும் அமீரகம் மற்றும் ஓமனில் உலகக் கோப்பை டி20 நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 16 செப் 2021