மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

தொலைத்தொடர்பு துறையில் 100 சதவிகிதம் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி!

தொலைத்தொடர்பு துறையில் 100 சதவிகிதம் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி!

தொலைத்தொடர்பு துறையில் 100 சதவிகிதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

தற்போது அறிவித்துள்ள புதிய முறைப்படி ரிசர்வ் வங்கியிடம் துறை ரீதியான அனுமதி பெறாமல் நேரடியாக முதலீடு செய்யும் வகையில் வழிமுறையை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. மேலும் புதிய முறைப்படி, அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும், 100 சதவிகித தொலைத்தொடர்பு துறையில் நேரடி வழி சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக 49 சதவிகிதத்துக்கு மேலான முதலீடுகளுக்கு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், தற்போது 100 சதவிகிதம் வரை நேரடி வழி (Automatic Route) ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், முன்னர் 20 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்பட்ட அலைக்கற்றையின் ஏலம் கால அளவு தற்போது 30 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அலைக்கற்றையைப் பகிர்ந்துக்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த பகிர்தல் முற்றிலும் இலவசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு நான்கு ஆண்டுகள் வரை நிலுவைத்தொகைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், தொகையை திருப்பி செலுத்தும்போது இரண்டு சதவிகித வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் அமைச்சரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 16 செப் 2021