மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

கொரோனா இறப்பு சான்றிதழ்: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

கொரோனா இறப்பு சான்றிதழ்: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்குவதில் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீ ராஜலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு பலியானவர்களுக்கு, கொரோனாவால்தான் உயிரிழந்தார் என சான்றிதழ் வழங்கப்படாததால், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரால் உரிய நிவாரண உதவிகளை பெற இயலவில்லை. அதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கொரோனாவால் உயிரிழந்தவர் என குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று(செப்டம்பர் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசு விதிகள் வகுத்துள்ளது. அந்த விதிகளின் அடிப்படையில், மாவட்ட அளவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர், தலைமை மருத்துவ அலுவலர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது"என தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், மாவட்ட குழுக்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு முந்தைய மரணங்கள் குறித்து ஆய்வு செய்து, அக்டோபர் 31ஆம் தேதிக்குள் இறப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும். ஏற்கனவே வழங்கிய சான்றிதழ்களில் கொரோனா மரணம் என குறிப்பிடாமல் இருந்து, ஆய்வில் கொரோனாவால் மரணம் அடைந்தவர் என தெரிய வந்தால், ஒரு மாதத்திற்குள் கூடுதல் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

வியாழன் 16 செப் 2021