மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

மூன்று கோயில்களில் அன்னதானம் திட்டம் தொடக்கம்!

மூன்று கோயில்களில் அன்னதானம் திட்டம் தொடக்கம்!

திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய கோயில்களில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை இன்று(செப்டம்பர் 16) காணொலி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்தார்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில்,” செப்டம்பர் 17ஆம் தேதி முதல் திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய மூன்று முக்கிய கோயில்களில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. அதனால், செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பதில், ஒருநாள் முன்னதாக அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'முப்பொழுதும், ..பக்திப்பசியோடு வருவோருக்கு அன்பின் ருசியோடு’ என்ற பெயரில் திருச்செந்தூர் முருகன் கோயில், திருத்தணி முருகன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து கோயில் மண்டபங்களில் தலைவாழை இலை போட்டு ஜாங்கிரி, சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல், வடை, பாயாசம், தண்ணீர் பாட்டிலுடன் பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

கோயில்களில் முறையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.

கோயில்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை அன்னதானம் வழங்கப்படும். ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும் வரை நாளை முதல் கோயில்களில் அன்னதானம் பார்சலில் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஸ்ரீரங்கம், பழனி ஆகிய கோயில்களில் மூன்று வேளை அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது மேலும் மூன்று கோயில்களில் தொடங்கப்பட்டிருப்பதால், அன்னதானம் வழங்கும் கோயில்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 16 செப் 2021