மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: தேங்காய் அல்வா!

ரிலாக்ஸ் டைம்: தேங்காய் அல்வா!

அல்வா என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா தான். ஆனால் அல்வாவில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் அல்வா. உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ரிலாக்ஸ் டைமில் ஓர் இனிப்பு பலகாரம் செய்து கொடுக்க விரும்பினால், அதற்கு தேங்காய் அல்வா சரியான தேர்வாக இருக்கும்.

எப்படிச் செய்வது?

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ஒரு டீஸ்பூன் முந்திரியைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் துருவிய ஒரு கப் தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதில் கொதிக்க வைத்து குளிர வைத்த ஒரு கப் பாலை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்கவும். பால் சுண்டி நீரின்றி போகும் நிலையில் நான்கு டேபிள்ஸ்பூன் சர்க்கரையைச் சேர்த்து தொடர்ந்து கிளறவும். கலவையானது கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். பின்பு அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் கிளறும்போது, அல்வா போன்று எதிலும் ஒட்டாமல் வரும். அப்போது முந்திரி மற்றும் எஞ்சிய சிறிதளவு நெய்யையும் சேர்த்து கிளறி இறக்கினால், தேங்காய் அல்வா தயார்.

சிறப்பு

தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன.இந்த தேங்காய் அல்வா எலும்புகளையும் வலுப்படுத்தும். வளரும் குழந்தைகளுக்கேற்ற சத்தான அல்வா இது.

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

வியாழன் 16 செப் 2021