மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: கல்கண்டு சாதம்

கிச்சன் கீர்த்தனா: கல்கண்டு சாதம்

விரதங்கள் அதிகம் இருந்தாலும் நவராத்திரி பண்டிகை நாள்களும் புரட்டாசி சனிக்கிழமைகளும் வருவதால் இந்த மாதத்திலும் அநேக பட்சணங்கள் செய்து ஆண்டவனுக்கு நைவேத்தியமாகப் படைப்பது வழக்கம். பாலும் பருப்பும் அவலும் அதிகம் பயன்படுத்தி பெருமாளை ஆராதித்தால் அந்த வேங்கடமுடையான் எந்நாளும் விலகாத செல்வங்களை அள்ளித்தருவான் என்பது நம்பிக்கை. நான்முகன் தேவியான நாமகளுக்கு, கல்கண்டு சாதம் படைத்து வழிபட்டால் இனிய சொல்கொண்டு நம்மைக் காப்பாள் என்பது நம்பிக்கை. ஞானமழை முகிலான வாணிக்குப் பிரியமான நைவேத்தியத்தைப் படைத்து நலங்கள் யாவும் பெறுவோம்.

என்ன தேவை?

பச்சரிசி - ஒரு கப்

பால் - ஒரு கப்

டைமண்டு கல்கண்டு - ஒரு கப்

கிராம்பு - 5

ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

முந்திரி - 10

திராட்சை - 10

நெய் - 50 கிராம்

எப்படிச் செய்வது?

கழுவிக் களைந்த அரிசியைக் கொதிக்கும் பாலில் சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும். சாதம் இறுக ஆரம்பிக்கும்போது கல்கண்டு களைக் கொட்டிக் கிளறவும். இப்போது சாதம் இளகும். இதில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, கிராம்பு சேர்த்துக் கிளறவும். மீதமிருக்கும் நெய்யைச் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். இறுதியாக ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். கொஞ்சம் கல்கண்டுகளை மேலாகத் தூவி படைக்கலாம். தேங்காய்த் துருவல், குங்குமப்பூ தூவி அலங்கரித்தும் படைக்கலாம்.

நேற்றைய ரெசிப்பி: சோளச் சுண்டல்!

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

வியாழன் 16 செப் 2021